தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக பார்த்திபன் எனும் 55வயது நபர் உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் பெண் :
நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி ஆண் :
தற்போது இன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் எனும் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…