#BREAKING : திருச்சி எம்பி சிவா வீடு மீது தாக்குதல்..!
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.
திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. டென்னிஸ் அரங்கை திறக்க எம்.பி சிவாவை அழைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை மறித்தனர்.
திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது
அமைச்சருக்கு எதிராக முழங்கியதால் திருச்சி சிவாவின் வீட்டின் மீது நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கார் கண்ணாடி, வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.