#Breaking:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – முப்படைத் தளபதியின் நிலை என்ன?,விசாரிக்க உத்தரவு!

Default Image

நீலகிரி:குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை(IAF) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருந்துள்ளனர் என்றும்,குறிப்பாக,முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட  14 பேர் பயணம் செய்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கூறப்படுகிறது.

 

இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, நான்கு உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் யார் என்பது அடையாளம் காணமுடியாத அளவுக்கு உள்ளதாகவும்,விபத்தில் சிக்கியவர்களில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனினும்,முப்படைத் தளபதியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

IAF Mi-17V5

இந்நிலையில்,விபத்துகுள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் இருந்ததாகவும்,விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை(IAF) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக IAF தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,டெல்லியில் இருந்து சூலூருக்கு  பயணித்தவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.அதில்,முப்படைத்தளபதி பிபின் ராவத்,மதுலிகா ராவத் எல்.எஸ்.லிடர்,ஹர்ஜிந்தர் சிங் ,ஜிதேந்திர குமார் ,விவேக் குமார்,சாய் தேஜா ,ஹாவ் சாட்பால்,குருசேவாக் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஹெலிஹாப்டர் விபத்து தொடர்பாக தற்போது பிரதமருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதன்பின்னர்,அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு மருத்துவ குழு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வமான விவரங்கள் பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP