தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.அதன்படி,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கிரிராஜன்,ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதனையடுத்து,தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதே சமயம்,இரு மாநிலங்களவை இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,தர்மர் ஆகியோர் ஓபிஎஸ்,ஈபிஎஸ் முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்,அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.இந்நிலையில்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில்,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி,திமுகவில் 3,அதிமுகவில் 2,காங்கிரஸ் 1 பேர் உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,தமிழக அரசியல் கட்சியினர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,கிரிராஜன், ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம்,ப.சிதம்பரம்,சிவி சண்முகம்,தர்மர் உள்ளிட்ட 6 பெரும் போட்டியின்றி தேர்வாகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இதனையடுத்து,வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் ஜூன் 3 ஆம் தேதி கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…