சென்னை:மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.இதன்காரணமாக,மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் விதமாகவும் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் போன்ற பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து முதற்கட்ட அறிக்கையை வல்லுநர் குழு,முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தற்போது தாக்கல் செய்துள்ளது.
அதன்படி,சென்னையில் தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில்,சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும் எனவும்,வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…