#Breaking:பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு;கண்காணிக்க குழு – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

சென்னை:குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய 2022-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும்,பொங்கல் சிறப்பு தொகுப்பபில் கரும்பை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

“2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை. 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505/- செலவில் மொத்தம் ரூ. 1088,17,70,300/- (ரூபாய் ஆயிரத்து எண்பத்தெட்டு கோடியே பதினேழு இலட்சத்து எழுபதாயிரத்து முந்நூறு மட்டும்) செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் பொருட்கள்:

  1. பச்சரிசி – ஒரு கிலோ,
  2. வெல்லம் – ஒரு கிலோ,
  3. முந்திரி – 50 கிராம்,
  4. திராட்சை – 50 கிராம்,
  5. ஏலக்காய் – 10 கிராம்,
  6. பாசிப்பருப்பு – 500 கிராம்,
  7. நெய் – 100 கிராம்,
  8. மஞ்சள்தூள் – 100 கிராம்,
  9. மிளகாய் தூள் – 100 கிராம்,
  10. மல்லித்தூள் – 100 கிராம்,
  11. கடுகு – 100 கிராம்,
  12. சீரகம் – 100 கிராம்,
  13. மிளகு – 50 கிராம்,
  14. புளி – 200 கிராம்,
  15. கடலைபருப்பு – 250 கிராம்,
  16. உளுத்தம்பருப்பு – 500 கிராம் ,
  17. ரவை – 1 கிலோ,
  18. கோதுமை மாவு – 1 கிலோ,
  19. உப்பு – 500 கிராம்,
  20. துணிப்பை – 1.

மேலும்,அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2,15,48,060/- குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க, கரும்பு ஒன்றுக்கு ரூ.33/ வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மொத்தம் ரூ.71,10,85,980/- (ரூபாய் எழுபத்து ஒரு கோடியே பத்து இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது கோடி செலவில் கரும்பினை கொள்முதல் செய்து வழங்கலாம் எனவும்,

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்,மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்திட உரிய அனுமதியும், பொங்கல் பரிசுத் தொகுப்பான 20 பொருட்களில், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக, விரிவான அறிவுரைகள் தனியே வழங்கப்படும்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

13 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

13 hours ago