#Breaking:4 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழையும் ,5 நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,தென்காசி,விருதுநகர்,சிவகங்கை,மதுரை,திருவாரூர்,புதுக்கோட்டை,தஞ்சை ,நாகை,சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல்,மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025