#Breaking:சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாசித்த மக்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனினும், மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதால், அதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளும் இந்த முகாம்களில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.டெங்கு, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

Recent Posts

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

33 minutes ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

58 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

1 hour ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

2 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

3 hours ago