#Breaking:காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைகிறது;தீபாவளி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம்..!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது.இதனால்,தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு(தீபாவளி வரை) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக,இன்று கன்னியாக்குமரி,நெல்லை, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மதுரை,தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா,இலங்கை கடற்கரையில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025