சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தினர்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில்,ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தனர்.
இந்நிலையில்,இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,”சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக தமிழக முதல்வரிடம் ஏற்கனவே ஆளுநர் உறுதி அளித்திருந்தார். ஆனால்,உறுதியளித்தபடி ஆளுநர் செயல்படவில்லை.
பல முறை அழுத்தம் கொடுத்ததும் நீட் மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.எனவே,நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்ப நேரில் வலியுறுத்தினோம்.ஆனால்,எங்கள் இருவரிடத்திலும் எந்தவிதமான உத்திரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை.எனவே,தமிழ்நாடு அரசின் மாண்பு காக்கப்படவில்லை என்பதால் இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…