#Breaking:உரம் தொடர்பான புகாரை தெரிவிக்க உதவி எண்;தனி அலுவலர் – தமிழக அரசு அறிவிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க உதவி எண்ணும் ,புகாரை விசாரித்து தீர்வு காண தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9363440360 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு போன்ற தற்போதைய சூழலில் டெல்டா மாவட்டங்களில் போலி பொட்டாஷ் உரம் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும்,புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவிலான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக,விவசாயிகளின் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக வேலாண்மை உற்பத்தி ஆணையர் சமய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)