#Breaking:இல்லத்தரசிகளே இதுதான் சான்ஸ்…தங்கம் விலை அதிரடி குறைவு!

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.
இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்தும்,நேற்று ரூ.32 குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து,கிராம் ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025