#Breaking:அதிர்ச்சி…மீண்டும் சரிந்த பாறைகள் – உரிமையாளர் கைது!

Default Image

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து,தூத்துக்குடி,திருநெல்வேலியில் இருந்து ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டு,அதன் உதவியுடன் லாரி,ஜேசிபி மீது விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,மீண்டும் திடீரென பாறை சரிவு ஏற்பட்டதால் ஆட்சியரின் உத்தரவின்பேரில் மீட்புப்பணி நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் குவாரிக்கு மேலே வந்துள்ளனர்.

இதனால்,இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்புப்படையினர் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நேற்று இரவு முதல் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று விபத்தில் சிக்கிய ஒருவர் கத்தி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.குவாரியில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதால் குவாரியின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும்,அவரது மகனும் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்