அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை.
தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.
அதில், சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.