காலை உணவு திட்டம் – தெலுங்கானா குழு தமிழ்நாடு வருகை!
தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெரிந்துகொள்ள 5 பேர் கொண்ட தெலுங்கானா குழுவினர் தமிழகம் வந்துள்ளது. நாளை சென்னை ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 25ம் தேதி கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிய தெலங்கானா அதிகாரிகள் வருகை தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில், 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவு தயாரிக்கும் முறை, பள்ளிக்கு எடுத்துச் செல்லும் முறை குறித்தும் கேட்டறிய உள்ளனர்.
கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.