ஆகஸ்ட் 25ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

CM Break fast Scheme

ஆகஸ்ட் 25ம் தேதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது

இதன் மூலம, வரலாற்றுச் சிறப்புமிக்க “காலை உணவுத் திட்டத்தால்” மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றி கல்வி பெறுதல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படித்த திருக்குவளை அரசு பள்ளியில் இந்த காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.  அதாவது, அந்நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதற்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த காலை உணவுத் திட்டம் கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்