பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் – நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டாா்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டதை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.