அரசு பள்ளிகளில் இனி காலை உணவு… மாணவர்களின் நலனை கையில் எடுக்கும் எடப்பாடி..
- தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தியிருந்தார்.
- இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி முடிவு.
இதன்படி காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என மாணவ-மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.மேலும் “மாநகராட்சிப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இந்த காலை உணவுத் திட்டத்தினால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. இதனால் ஏனைய தமிழக பகுதியிலுள்ள மாணவர்களையும் அரசு பள்ளியில் கற்க வைப்பதற்க்காக இதனை முன்னோடித் திட்டமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இந்த மகத்தான திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை அதிக அளவில் ஈர்க்க முடியும்” என்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி யோசனை கூற அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , காலை உணவாக வழங்கப்படும் இட்லி, தோசை, பொங்கலோடு, பயிறு வகைகளையும் இணைத்து காலை சத்துணவாக கொடுக்கலாம் எனறு தெரிவித்திருக்கிறார் என கூறுகின்றனர் உள்ளாட்சித்துறை அதிகாரிகள்.
இந்த திட்டத்தை விரிவுபடுத்த தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, காலையில் சத்துணவு என்கிற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் விவாதித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் இரு நேர பசியை போக்கிய சேவையை இந்த அரசு பெரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.