#Breaking:குண்டு பாய்ந்து சிறுவன் மரணம் – அறிக்கை தாக்கல்
புதுக்கோட்டை:துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது.
இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,5 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிக்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இது சிறுவனின் பெற்றோர்,உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து,சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையில்,பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினர்,தமிழக காவல்துறையினரிடம் கோட்டாட்சியார் தண்டாயுதபாணி விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில்,துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.