உடைந்தது பல்லாக்கு.! விழுந்தது பெருமாள் சிலை.! பரிகார பூஜைகள் தீவிரம்.!

Default Image
  • திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு பகல்பத்து முடிந்து ராப்பத்து விழாவின் தொடக்கமாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு.
  • இராப்பத்து நிகழ்ச்சியின் 8-ம் நாளையொட்டி, திருமங்கை மன்னன் வேடுபரி உற்சவத்தில் பல்லக்கு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். எல்லாம் வல்ல பெருமாளின் திருவடியை சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் தனது பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச்சென்று அருள்பாலிக்கிறார்.

இதற்கான விழா கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து முடிந்து ராப்பத்து விழாவின் தொடக்கமாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் பெருமாள் கோவில் நடைபெறும் மகத்துவமான விழா வைகுண்ட ஏகாதசி திருவிழா.

இந்த நிகழ்ச்சி 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமே சொர்க்கவாசல் திறப்புதான். நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து நிகழ்ச்சியின் 8-ம் நாளையொட்டி, திருமங்கை மன்னன் வேடுபரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து திருமங்கை மன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபமும் நடைபெற்றது. அப்போது பல்லாக்கை தூக்கிச் சென்ற போது திடீரென பல்லக்கு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பக்தர்கள் இடையே அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் பெருமாள் சிலைக்கு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்