நாளை பணிக்கு வராவிடில் பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கை – மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் .அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது .எவ்வித முன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகும் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள், காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.