#BREAAKING: விசாரணைக்கு கைதி மரணம் – நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பபத்தினர் முடிவு!

Default Image

விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு.

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது பணத்தை திருப்பி தர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நீலையில், நிவாரண தொகையை நீதிமன்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தலைமை செயலக களனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே, விசாரணை கைதி சந்தேக மரணம் தொடர்பாக விக்னேஷின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு எந்த விஷயமும் பேச கூடாது என்று தெரிவித்தாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், விக்னேஷின் குடும்பபத்தினர், காவல்துறை கொடுத்த நிவாரண தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த 18-ஆம் தேதி புரசைவாக்கதில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரை காவல்துறை கையது செய்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் ஆட்டோ ஓட்டுனரையும் அடையாளம் கண்டனர். இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 3 பொலிஸாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்