பார்ப்பன இந்து எச்.இராஜா என்ன சூத்திரரா? – திருமாவளவன்
ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார் என திருமாவளவன் பேட்டி.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார். சூத்திரர் எனப்படும் கடைநிலை இந்துக்களுக்குத் தன்மானம் ஊட்டும் நோக்கில்தான் பேசியுள்ளார். பிராமண வர்ணத்தைச் சார்ந்த எச்.இராஜாவுக்கு ஏன் ஆத்திரம்? பார்ப்பன இந்து எச்.இராஜா என்ன சூத்திரரா? என தெரிவித்துள்ளார்.