கோவையி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் தக்ஷ நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. இதில் நேற்று 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பூங்காவில் உள்ள மின் விளக்குகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் மின்சார ஓயரை வெளியே எடுத்துவிட்டு அதனை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை வேளையில் விளையாட வந்த லக்சன் என்ற 9 வயது சிறுவன், சிறுவன் ஒயரின் மீது விழுந்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தோட்டக்காரர், எலக்ட்ரீசியன், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…