காய்ச்சலால் சிறுவன் பலி……!!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையை பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.