தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு…! போலி மருத்துவர் கைது…!
தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்த நிலையில், போலி மருத்துவர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி,ஜோடங்குட்டை பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவற்றின் மகன் சூரிய பிரகாஷ். இவருக்கு வயது (13). சிறுவனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கோபிநாத் என்பவரிடம் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த கோபிநாத் என்பவரிடம் சென்று காய்ச்சலுக்கு ஊசி போட்டுள்ளனர். இதனையடுத்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கோபிநாத் என்பவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.