திண்பண்டம் என்று நினைத்து, நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் அங்குள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். மீன்களை பிடித்துக்கொண்டு தனது சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு சென்ற தமிழரசன், மீதமுள்ள நாட்டு வெடி ஒன்றை அங்கு வைத்து சென்றுள்ளார்.
அந்த வேளையில், அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், மீதமுள்ள ஜெலட்டின் குச்சியை, திண்பண்டம் என நினைத்து சாப்பிட முயன்ற போது, அது வெடித்தது. இதனையடுத்து, விஷ்ணுதேவ் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறைக்கு பயந்த அவரது பெற்றோர், அருகில் உள்ள சுடுகாட்டில் குழந்தையின் சடலத்தை எரித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புகாரின் பெயரில், காவல்துறையினர் கங்காதரன், மோகன்ராஜ், தமிழரசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…