தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூன்றுபேரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இது தொடர்பாக, அரசராஜன், (19) கதிரேசபிரபு, (20), மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதி, பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றவர், கொரோனா அதிகமானதால், சொந்த ஊரான குல்லிசெட்டிபட்டிக்கு வந்து தங்கினார்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான கதிரேசபிரபு, அரசராஜனுடன் சேர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘திண்டுக்கல்லில், பாலமுருகன் திருடிய இருசக்கர வாகனத்தை, இரண்டு நாட்களில், நாக்பூருக்கு ஓட்டிச் சென்று மறைத்து வைத்தார். விமானத்தில் திரும்பி வந்து, வழிப்பறியை தொடர்ந்தார்.’இவர்களிடம் இருந்து மூன்று அலைபேசிகள், 2 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் அகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…