ஓபிஎஸ், மன்சூர் அலிகான் இருவருக்கும் பலாப்பழம் சின்னம்!
Election2024: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகிறது.
சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் பதிவு செய்ய கட்சிகளுக்கும், பிறகு சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, வேலூரில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஓபிஎஸ் தனக்கு வாளி சின்னம் ஒதுக்க கோரியிருந்தார். அதேசமயம் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் 3 பன்னீர்செல்வமும் வாளி சின்னம் கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.