எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் உதயநிதி பேச்சு.
நேற்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 9 ஜோடிகளுக்கு சீர்வரிசை உடன் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். ஓபிஎஸ் தவறுதலாக என்னுடைய காரில் ஏற சென்றார். காரில் ஏறினாலும் பரவாயில்லை. ஆனால் கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சட்டமன்றத்தில் கூறினேன். அதற்கு எந்தக் காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என கூறினார்.
ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கமலாலயத்தில் தான் அவரது கார் காத்திருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…