முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனவும், அவர்கள் காலி பானையாக உள்ளதாக தெரிவித்தார். வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள். முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என கூறினார்.
அதுமட்டுமின்றி, தலைமை அறிவிக்கும் கருத்துக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் எனவும், தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது. கிராம சபை கூட்டம் நடத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…