மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால் கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் செந்தில் 450 மாடுகளை வாங்கி பண்ணை வைத்ததாக தெரிகிறது. அதில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை சமாளிக்க கோபாலகிருஷ்ணனிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தனது மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பேசியபடி பணமும் தராமல் செந்தில் தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
மேலும் மெஸ்ஸில் உள்ள 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் வங்கி கடன் வாங்கியதாகவும் அதனை செலுத்தாமல் தலை மாறிவிட்டதாகவும் மெஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…