ஜோதிடரை நம்பி 450 மாடுகள் வாங்கி கடன் தொல்லை..! தலைமறைவான மெஸ் உரிமையாளர்..!

Default Image

மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால்  கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் செந்தில் 450 மாடுகளை வாங்கி பண்ணை வைத்ததாக தெரிகிறது. அதில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால் கடன் பிரச்சனையில்  இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை சமாளிக்க கோபாலகிருஷ்ணனிடம்  5 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தனது மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பேசியபடி பணமும் தராமல் செந்தில்  தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

மேலும் மெஸ்ஸில் உள்ள 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் வங்கி கடன் வாங்கியதாகவும் அதனை செலுத்தாமல் தலை மாறிவிட்டதாகவும் மெஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs nz match
ragupathy dmk seeman
ajith gbu dress
Uttarakhand avalanche
INDvsNZ
ilayaraja and mk stalin