வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 88,957 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது என்றும், வெப்கேமரா மூலம், 50 சதவீத வாக்கு சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கொரோனா நோயாளி வாக்களிக்க பிபிஇ கிட் கொடுக்கப்படும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்றும், உடல் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டால் அவர்கள் மாலை 6 மணிக்குப் பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்ப வசதியாக இலவச கார் வசதியை அளிக்க உபர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சேவையை வழங்குகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…