பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 88,957 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது என்றும், வெப்கேமரா மூலம், 50 சதவீத வாக்கு சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கொரோனா நோயாளி வாக்களிக்க பிபிஇ கிட் கொடுக்கப்படும்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்றும், உடல் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டால் அவர்கள் மாலை 6 மணிக்குப் பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்ப வசதியாக இலவச கார் வசதியை அளிக்க உபர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சேவையை வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்