பூண்டி ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு; 1000 கன அடி நீர் வெளியேற்றம்.!
பூண்டி ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 1000 கன அடி நீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தற்போது, இந்த ஏரியின் நீர்மட்டம் 35 அடி கொண்டுள்ள இந்த ஏரி 33 அடி ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும், நீர்வரத்தை பொறுத்து 10,000 கனஅடி வரை நீர் திறக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, பூண்டி ஏரியில் முதற்கட்டமாக 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.