புக்கிங் ஓபன் : தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்.!

தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 3,4 இல் தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.

Diwali Special Trains

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை – தாம்பரம் இடையே நவ.3 ஆம் தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவ.4 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை – தாம்பரம் இடையேவும், மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த 2 சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கைபடி, வண்டி எண் 06003 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில், நவம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.10க்கு சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில், நவம்பர் 4ம் தேதி பகல் 2.30க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.15க்கு திருநெல்வேலி சென்றடையும்.

எந்த மாவட்ட வழியாக செல்லும்

தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம் ஆகிய மாவட்ட வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்

எங்கெல்லாம் நிற்கும்?

இந்த ரயில் சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடயம், பாவூர்ச்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்