பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு அரசு பேருந்துகளில் இன்று முதல் தொடக்கம்!

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு அல்லது வெளியூருக்கு செல்ல விரும்புவது வழக்கம். எனவே பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் ஏற்படும். ஆனால் தற்பொழுது கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், தமிழக அரசு பேருந்துகளில் இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு துவங்கப்படும் என போக்குவரத்துத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருப்பதற்காகவும் இவ்வாறு முன்பதிவு முன்னதாகவே துவங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025