தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .அந்த வகையில் 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடையும் இன்டர்சிட்டி ரயிலும், அதே ரயில் கோவையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு வந்தடையும் என்று கூறப்படுகிறது. இதே போன்று கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும் என்றும், சென்னையில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 1.15 மணிக்கு சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து இரவு நேர சிற்ப்பு ரயிலும் சென்னை மற்றும் கோவைக்கு இடையே இயக்கப்படுவதாகவும், அது இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 6 மணிக்கு கோவைக்கும், அதனையடுத்து இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 6.35 மணிக்கு சென்னைக்கு வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களும், வியாழக்கிழமையை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருச்சிக்கும், அதனையடுத்து திருச்சியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.50 மணிக்கு சென்னை எழும்பூரில் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – காரைக்கால் செல்லும் ரயில் மாலை 3.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு சென்றடையும் என்றும், அதே ரயில் காரைக்கால் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நண்பகல் 12.10க்கு வந்தடையும்.
அதை போன்று எழும்பூர் – மதுரை செல்லும் ரயில் மதியம் 1. 45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15க்கு மதுரைக்கு சென்றடையும் என்றும், அதே ரயில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மதியம் 2.35மணிக்கு வந்தடையும். அதை போன்று எழும்பூர் – தூத்துக்குடிக்கு செல்லும் ரயில் மதியம் மாலை 7.35மணிக்கு புறப்பட்டு காலை 6.45க்கு மதுரைக்கு சென்றடையும் என்றும், அதே ரயில் மதுரையில் இருந்து இரவு 8.05மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 7.35மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும், ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ரயில் நிலையத்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் 90 நிமிடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும், அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏசி கம்பார்ட்மென்டில் பயணம் செய்பவர்களின் பெட்டிகளில் வெப்பநிலை தேவையான அளவு மட்டும் வைக்கப்படும் என்றும், தலையணை, போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…