முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் – தெற்கு ரயில்வே

ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
பொன்னையாற்றில் ஆங்கிலேயர்கால ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை, ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025