தமிழகம் முழுவதும் போகி பண்டிகை…..!!
ஒவ்வொரு ஆண்டும் மார்கழியின் கடைசி நாளை, தமிழர்கள் போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். போகிப் பண்டிகையில் பழையன கழிந்தும், புதியன புகவேண்டும் என தமிழர்கள் சொல்வார்கள் . அதையொட்டி, மார்கழியின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை மொத்தமாக அழித்து, சுத்தப்படுத்தி, புதிய பொருட்களுக்கு இல்லங்களில் வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த தினத்தில் அவரவர் இல்லங்களில் வேம்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட 5 வகை மூலிகை பொருட்களை பயன்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை தமிழர்கள் பேணுகின்றனர்.