Bonus for co-operative society workers [file image]
தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44,470 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ரூ.28 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10% போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!
போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…