தென் தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு வங்கி தொடக்கம்..!

தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்.
வாகன விபத்துகளால் கை கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு புற்றுநோய் மற்றும் பல விதங்களில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்பால், பலருக்கும் எலும்புகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு. அதாவது, எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு, புதிய எலும்பை பொருத்த வேண்டும்.
அந்த வகையில், தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க சென்னை கல்வி மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், தென் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட எலும்பு வங்கி இல்லாத நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்முறையாக எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள எலும்பு வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.