ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னையில், கோபாலபுரம், கேகே நகர், பாரிமுனை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டனர்.

வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தமிழக முதல்வர்.? – இபிஎஸ் கேள்வி.!

 இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறைக்கு அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் இருந்து புகார்கள் வந்தது. இதனை அடுத்து, வெடிகுண்டு சோதனையாளர்கள் உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் இந்த மிரட்டல் வந்ததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வர பள்ளிகளுக்கு விரைந்ததால் பெரும் பரபரப்பாக சென்னை நகர் பகுதி காணப்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்தும், அதற்கான நடவடிக்கை குறித்தும் பல்வேறு தகவல்களை சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், சென்னை பெருநகரில் சில கல்வி நிறுவனங்களுக்கு  இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பள்ளிகளில் பரிசோதிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த விசரணையில் பள்ளிகளுக்கு வந்த மிரட்டல் ஒரு புரளி என தெளிவாகியுள்ளது. ஒரே இமெயில் மூலம் இந்த மிரட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார்கள்.

தற்போது அந்த இமெயில் ஐடியை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்க பதட்டமடைய வேண்டாம். 13 பள்ளிகளில் மிரட்டல் வந்துள்ளது. நிறைய பள்ளிகளில் சோதனை செய்து விட்டோம். இது ஒரு புரளி பெற்றோர்கள் பயப்பட வேண்டியதில்லை.

ஒரே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. போன் மூலம் மிரட்டல் செய்தி வரவில்லை. அந்தந்த பள்ளிக்கு தனித்தனியாக மிரட்டல் வந்துள்ளது. காலை முதல் இந்த மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் கால் வந்துள்ளது. புகார் வந்த உடன் நாங்கள் சோதனை குழுவை அனுப்பினோம். விசாரணை பற்றி விரிவாக சொல்ல முடியாது. இதனை கண்டுபிக்கசற்று தாமதம் ஆகும். பொதுமக்களுக்கு இதன்மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எல்லா பள்ளிகளையும் நாங்கள் சோதனை செய்கிறோம்.  வழக்குப்பதிவு செய்துள்ளோம், விசாரணை செய்து வருகிறோம் என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Recent Posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

9 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

57 mins ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

58 mins ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

1 hour ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

2 hours ago