ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!
சென்னையில், கோபாலபுரம், கேகே நகர், பாரிமுனை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டனர்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தமிழக முதல்வர்.? – இபிஎஸ் கேள்வி.!
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறைக்கு அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் இருந்து புகார்கள் வந்தது. இதனை அடுத்து, வெடிகுண்டு சோதனையாளர்கள் உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் இந்த மிரட்டல் வந்ததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வர பள்ளிகளுக்கு விரைந்ததால் பெரும் பரபரப்பாக சென்னை நகர் பகுதி காணப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்தும், அதற்கான நடவடிக்கை குறித்தும் பல்வேறு தகவல்களை சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், சென்னை பெருநகரில் சில கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பள்ளிகளில் பரிசோதிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த விசரணையில் பள்ளிகளுக்கு வந்த மிரட்டல் ஒரு புரளி என தெளிவாகியுள்ளது. ஒரே இமெயில் மூலம் இந்த மிரட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார்கள்.
தற்போது அந்த இமெயில் ஐடியை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்க பதட்டமடைய வேண்டாம். 13 பள்ளிகளில் மிரட்டல் வந்துள்ளது. நிறைய பள்ளிகளில் சோதனை செய்து விட்டோம். இது ஒரு புரளி பெற்றோர்கள் பயப்பட வேண்டியதில்லை.
ஒரே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. போன் மூலம் மிரட்டல் செய்தி வரவில்லை. அந்தந்த பள்ளிக்கு தனித்தனியாக மிரட்டல் வந்துள்ளது. காலை முதல் இந்த மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் கால் வந்துள்ளது. புகார் வந்த உடன் நாங்கள் சோதனை குழுவை அனுப்பினோம். விசாரணை பற்றி விரிவாக சொல்ல முடியாது. இதனை கண்டுபிக்கசற்று தாமதம் ஆகும். பொதுமக்களுக்கு இதன்மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எல்லா பள்ளிகளையும் நாங்கள் சோதனை செய்கிறோம். வழக்குப்பதிவு செய்துள்ளோம், விசாரணை செய்து வருகிறோம் என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.