இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Bomb threat in EPS house at chennai

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த மிரட்டல் இ-மெயில் மூலம் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்பநாய் குழுவினர் வெடிகுண்டை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் இந்த சூழலில் இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்