#BREAKING: முதல்வர் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
தமிழக முதல்வரின் சென்னையில் இருக்கும் இல்லத்திற்கும், சேலத்தில் உள்ள இல்லத்திற்கும் மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தொலைபேசி மிரட்டலை தொடர்ந்து 2 இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இளத்தத்திற்கு வரவுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை திருப்பூரில் போலீசார் கைது செய்ததாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூரில் தேர்தல் பரப்புரைக்கு செல்ல உள்ளார். நேற்று முதல்வர் பரப்புரை சென்ற சென்னை- அரக்கோணம் சாலையில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டு உடன் இருந்தவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்று குறிப்பிடத்தக்கது.