ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.!

Akasa Air

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி ஆகாசா விமான போக்குவரத்து சேவையானது இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவால் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த விமான சேவை கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் சென்னை விமான நிலைய பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆகாசா விமானத்தின் அனைத்து பக்கங்களிலும் சோதனை செய்துள்ளனர். அதோடு நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் முழு சோதனை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்