மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தற்போது அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தகவல் எங்கிருந்து வந்தது என தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தேசிர்வாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூடுதலாக 350 போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளார்.
கோவிலுக்குள் வரும் அனைத்து வாசல்களிலும் வரும் பக்தர்களை தீவிரமாக கண்காணித்து,எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதித்து கோவிலுக்குள் அனுப்புகின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில், பல வெடிகுண்டு நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.