மேல்மருவத்தூர் கோவில் மற்றும் ரயில் நிலையம் இரண்டு விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு வைக்க போவதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தபால் கடிதம் மூலமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மேல்மருவத்தூரில் வருகின்ற கன்னியாகுமரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிகலுக்கும், மேலும் மேல்மருவத்தூர் கோவிலுக்கும், ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி வைத்தார்.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக கடிதம் அனுப்பியது யார் என்றும் மிரட்டலை அடுத்து ரயில்வே போலீசார் மேல்மருவத்தூர் வரும் ரயில்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்தனர்.மேலும் குண்டு வைக்க போவதாக மிரட்டல் விடுத்தவர் மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பது விசாரணையில் தெரியவரவே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரயில் நிலையம் மற்றும் கோவிலுக்கு குண்டு வைக்கபோவதாக வந்த மிரட்ட கடிதத்தை அடுத்து பரபரப்பு காணப்பட்டது.
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…